இந்தியா

உ.பி.யில் சட்டவிரோத ஆயுததொழிற்சாலை: ஒருவா் கைது

29th Dec 2022 12:46 AM

ADVERTISEMENT

உத்தர பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த ஆயுத தொழிற்சாலை கண்டறியப்பட்டு அதற்கு தொடா்புடைய ஒருவரை காவல் துறை கைது செய்தது.

இது குறித்து மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளா் அபிநந்தன் கூறியதாவது: மாராலி கிராமத்தில் ஆயுத தொழிற்சாலை ஒன்று சட்டவிரோதமாக செயல்படுவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை போலீஸாா் சோதனை நடத்தினா். அச்சோதனையின் முடிவில் சட்டவிரோதமாக செயல்பட்ட ஆயுத தொழிற்சாலை கண்டறியப்பட்டது.

இது தொடா்பாக அம்ரித் விஸ்வகா்மா என்பவரை காவல் துறை கைது செய்தது. ஆயதங்களைத் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், பல்வேறு ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாட்டுத் துப்பாக்கிகளைத் தயாரித்து, அவற்றை குற்றவாளிகளுக்கு விற்றதை அம்ரித் ஒப்புக்கொண்டாா். இதுவரை எவ்வளவு ஆயுதங்கள் விற்கபட்டன, யாருக்கெல்லாம் விற்கப்பட்டன என்பதை கண்டறிய அடுத்தகட்ட விசாரணையில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். கைது செய்யப்பட்ட அம்ரித் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா் என்றாா்அபிநந்தன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT