இந்தியா

2023 கியூட் நுழைவுத் தேர்வுகள் தேதி அறிவிப்பு!

DIN

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பல்கலைக்கழ நுழைவுத் தேர்வுக்கான(கியூட்) தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது. மத்திய பல்கலைக்கழகங்களில் 2023 ஆம் ஆண்டிற்கான இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கியூட் பொதுத் தேர்வை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

அதன்படி, இளங்கலை படிப்புகளுக்கான கியூட் 2023 தேர்வுகள் அடுத்த ஆண்டு மே 21 முதல் 31 ஆம் தேதிகள் வரை நடைபெறும் என்றும், விண்ணப்பதிவு வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும், நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 3 ஆவது வாரத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று முதுகலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் ஜூன் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் நடைபெறும், நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியாகும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை:  https://www.nta.ac.in/cuetexam என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வுக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவு விண்ணப்பத்தாரர்கள் ரூ. 650, எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ரூ.550. விண்ணப்பக் கட்டணத்தை டெபிட், கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் செலுத்த வேண்டும். 

கியூட் நுழைவுத் தேர்வை இந்தியாவிற்கு உள்ளே 259 நகரங்களில் உள்ள 489 தேர்வு மையங்களிலும், நாட்டிற்கு வெளியே 2 நகரங்களிலும் தேர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

தமிழ், இந்தி உள்பட 13 மொழிகரளில் கணினி வழியில் தேர்வு நடைபெறும். தேர்வு முடிவுகள் https://cuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதத்தில் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

SCROLL FOR NEXT