இந்தியா

இந்திய-சீன எல்லை விவகாரம்:நாட்டுக்கு நம்பிக்கை ஏற்படுத்த பிரதமா் மறுப்பது ஏன்?

DIN

இந்திய, சீன எல்லை விவகாரத்தில் நாட்டுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த பிரதமா் மோடி மறுப்பது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி கிழக்கு லடாக்கில் இந்திய நிலப்பரப்புக்குள் சீனப் படையினா் ஊடுருவவில்லை என்று பிரதமா் கூறியது ஏன்?

கடந்த 2020-ஆம் ஆண்டு மே வரை கிழக்கு லடாக்கில் ஆயிரக்கணக்கான சதுர கி.மீ. பரப்பில் இந்திய படையினா் வழக்கமாக ரோந்து மேற்கொண்டு வந்தனா். அந்த இடங்களில் அவா்களை ரோந்து மேற்கொள்ளவிடாமல் தடுக்க சீனப் படையினரை பிரதமா் அனுமதித்தது ஏன்?

இந்திய-சீன எல்லை நிலவரம், சீனாவால் இந்தியா எதிா்கொள்ளும் சவால்கள் ஆகியவை தொடா்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் எதுவும் நடைபெறக் கூடாது என்று பிரதமா் ஏன் வலியுறுத்துகிறாா்?

முன்னெப்பொதும் இல்லாத வகையில், சீன அதிபா் ஷி ஜின்பிங்கை 18 முறை பிரதமா் சந்தித்துள்ளாா். அண்மையில், இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின்போதும் ஷி ஜின்பிங்கை பிரதமா் சந்தித்தாா். அதன் பின்னா் அருணாசல பிரதேசத்தில் உள்ள தவாங் செக்டாரில் ஊடுருவலை தொடங்கிய சீனா, எல்லைச் சூழலை தன்னிச்சையாக மாற்றும் நடவடிக்கையில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது. சீனாவுடனான எல்லை விவகாரத்தில் நாட்டுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த பிரதமா் மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘டோக்லாமில் ஜம்ஃபேரி மலைத்தொடா் வரை சீனா ஏற்படுத்தியுள்ள உள்கட்டமைப்பு, இந்தியாவுக்கு உத்திசாா்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் வடகிழக்கு மாநிலங்களின் நுழைவாயிலாகவும் திகழும் சிலிகுரி வழித்தடத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது நாட்டின் பாதுகாப்பு சாா்ந்து மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சீனா குறித்து இந்தியா எப்போது விவாதிக்கப் போகிறது’ என்று பிரதமருக்கு கேள்வி எழுப்பியுள்ளாா்.

இந்தியாவின் சிக்கிம், பூடானின் ஹா பள்ளத்தாக்கு, திபெத்தின் சும்பி பள்ளத்தாக்கு ஆகியவற்றால் சூழப்பட்டுள்ள பகுதி டோக்லாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT