இந்தியா

இந்திய ராணுவ வீரர்களை சீனா தாக்கும்போது மத்திய அரசு இதை செய்யலாமா? அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

18th Dec 2022 05:55 PM

ADVERTISEMENT

இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்படும்போது ஏன் சீனாவிடம் இருந்து அதிக அளவிலான இறக்குமதியை மத்திய அரசு செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவால் தாக்கிப் பேசியுள்ளார்.

அருணாசலப் பிரதேச எல்லைகளில் சீனா தொடர்ந்து அத்துமீறி செயல்பட்டு வருகிறது. அண்மையில், சீன ராணுவத்தினர் தவாங் பகுதியில் அத்துமீறி நுழைய முயற்சி செய்தனர். அதனை இந்திய ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

இதையும் படிக்க: இந்த வெற்றிக்கு நாங்கள் கடினமாக உழைத்துள்ளோம்: கே.எல்.ராகுல்

இதனையடுத்து, இந்தியா-சீனா எல்லை விவகாரத்தில் மத்திய அரசினை பல்வேறு அரசியல் தலைவர்களும் தாக்கிப் பேசி வருகின்றனர். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி சீனா போருக்குத் தயாராவதாகவும், மத்திய அரசு தூங்குவதாகவும் விமர்சித்திருந்தார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்படும்போது ஏன் சீனாவிடம் இருந்து அதிக அளவிலான இறக்குமதியை மத்திய அரசு செய்ய வேண்டும் என தாக்கிப் பேசியுள்ளார். 

இதையும் படிக்க: நடிகர் அசோக் செல்வன் ‘நாய்’ என குறிப்பிட்டது இந்த விமர்சகரையா?

அதில் அவர் கூறியிருப்பதாவது: எல்லைப் பகுதியில் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்படுகிறார்கள். அதற்காக சீனாவினை தண்டிக்காமல் அவர்களிடமிருந்து மத்திய அரசு அதிக அளவிலான இறக்குமதியினை செய்து வருகிறது. இந்திய ராணுவ வீரர்களுக்கு மத்திய அரசு மரியாதை கொடுக்கவில்லை. சீனா என்ன செய்தாலும் அவர்களிடம் இறக்குமதி செய்வதை மத்திய அரசு குறைப்பதாக இல்லை என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT