இந்தியா

2027க்குள் இந்திய பொருளாதாரம் முதல் 3 இடத்திற்குள் இருக்கும்: ராஜ்நாத் சிங்

18th Dec 2022 07:01 PM

ADVERTISEMENT


மும்பை: இந்தியா இன்று வேகமாக வளர்ந்து வரும் ஐந்து பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருப்பதாகவும், 2027 ஆம் ஆண்டுக்குள் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட முதல் 3 நாடுகளில் இந்தியா இருக்கும் என்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் ஐஎன்எஸ் மர்மகோவா போர்க்கப்பலை  இந்திய கடற்படைக்கு அர்பணித்து வைத்தார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். 

பின்னர் அவர் பேசுகையில், உலகில் தற்போது வேகமாக மாறிவரும் சூழ்நிலையில், எந்தவொரு சூழ்நிலையும் எதிர்கொள்வதற்கு நாடு தயாராக இருக்க வேண்ய அவசியம் உள்ளது.

கரோனா நோய்த்தொற்று காரணமாக சமீபத்திய உலகளாவிய மாற்றங்கள், பின்னர் மத்திய கிழக்கு, ஆப்கானிஸ்தான் மற்றும் கடைசியாக உக்ரைனின் நெருக்கடி குறித்து நாடு அறிந்திருப்பதாக அவர் கூறினார். 

ADVERTISEMENT

இந்திய கடற்படைக்கு அர்பணிக்கப்பட்ட ஐஎன்எஸ் மர்மகோவா போர்க்கப்பல்

ஐஎன்எஸ் மர்மகோவா போர்க்கப்பல் இந்திய கடற்படையின் மிகவும் திறமையான கப்பல்களில் ஒன்றாகும். இந்த கப்பல் இந்தியாவின் போர்க்கப்பல் வடிவமைப்பு மற்றும் வளர்ச்சியின் சிறப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஒவ்வொரு நாடும் ஏதாவது ஒரு நாட்டைச் சார்ந்து இருக்கும் இன்றைய உலகமயமாக்கல் யுகத்தில், ஒட்டுமொத்த உலக வளர்ச்சிக்கும், ஒவ்வொரு நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் விதி அடிப்படையிலான வழிசெலுத்தல் சுதந்திரம் மற்றும் கடல் பாதைகளின் பாதுகாப்பு ஆகியவை மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது என்றார்.

இதையும் படிக்க | சென்னை சுங்க இல்ல 'வைகை' கட்டடம் நாட்டிற்கு ஒரு முன் உதாரணம்: நிர்மலா சீதாராமன்

பெரும்பாலான வர்த்தகம் கடல் வழியாக நடப்பதால், கடல் வழிகள் தொடர்பான தற்போதைய மற்றும் எதிர்கால திட்டங்களை மனதில் கொண்டு இந்தியா பல பெரிய நாடுகளுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்றார். 

மேலும், இந்தியா இன்று வேகமாக வளர்ந்து வரும் ஐந்து பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருப்பதாகவும், 2027 ஆம் ஆண்டுக்குள் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட முதல் 3 நாடுகளில் இந்தியா இருக்கும் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.

நிகழ்ச்சியில் கோவா ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை, கோவா முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்த், சிடிஎஸ் ஜெனரல் அனில் சவுகான் மற்றும் சிஎன்சி துணை அட்மிரல் அஜேந்திர பகதூர் சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT