இந்தியா

'நீதான் குடிகாரர்': பேரவையில் பொறுமையிழந்த நிதீஷ் குமார்

14th Dec 2022 04:56 PM

ADVERTISEMENT

சரன்: பிகார் சட்டப்பேரவையில் இன்று கள்ளச் சாராய பலி குறித்து பாஜக எம்எல்ஏக்கள் தொடர்ந்து கூச்சலிட்டு வந்த நிலையில், குடிகாரர் என்றாலே நீதான் என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் பொறுமையிழந்து பேசியது அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

பிகார் மாநிலம் சரண் மாவட்டத்தின் சப்ரா பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் பலியாகியிருப்பது தொடர்பாக, பிகார் சட்டப்பேரவையில் இன்று பாஜக எம்எல்ஏக்கள் குரல் எழுப்பினர்.

இதையும் படிக்க.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! ஆதரவு உள்ளே வெளியே!!

இதனால், தனது பொறுமையை இழந்த நிதீஷ்குமார், பாஜக எம்எல்ஏக்களைப் பார்த்து நீ தான் குடிகாரர் என்று கத்தினார்.

ADVERTISEMENT

இதனால், பேரவைக்குள் கூச்சல் குழப்பம் ஏற்பட்ட நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் அவையிலிருந்து வெளியேறி பேரவை வளாகத்துக்குள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

சப்ரா பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலியாகினர். மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர்.  

கடந்த 2016ஆம் ஆண்டு பிகாரில் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு, மது விற்பனை மற்றும் மது நுகர்வுக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT