இந்தியா

வகுப்பறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவர்; சிசிடிவி வெளியானது

14th Dec 2022 12:31 PM

ADVERTISEMENT

பர்வானி: மத்தியப் பிரதேச மாநிலம் பர்வானி மாவட்டத்தில், படிப்பில் பின் தங்கியதால் ஆசிரியர் திட்டியதால் மனம் உடைந்த 10ஆம் வகுப்பு மாணவர் வகுப்பறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தனியார் பள்ளியொன்றில் செவ்வாய்க்கிழமை நடந்த இந்த சம்பவம், வகுப்பறைக்குள் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

பள்ளியில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை, ஊழியர்கள் யாரேனும் பார்த்திருந்தால் கூட உடனடியாக மாணவரை மீட்டிருக்கலாம் என்றும், வகுப்பறைக்குச் சென்று ஒரு மாணவர் தூக்குக் கயிறை மாட்டி தூக்கிடும் வரை யாருமே அங்குச் செல்லாததும் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிக்க.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! ஆதரவு உள்ளே வெளியே!!

ADVERTISEMENT

முதற்கட்ட விசாரணையில், 15 வயதாகும் ஓம் செப்டா என்ற மாணவர், திங்கள்கிழமை நடந்த அறிவியல் பாட அரையாண்டுத் தேர்வை சரியாக எழுதவில்லை என்று மன அழுத்தத்தில் இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து பள்ளி விடுதியிலேயே தங்கி ஓம் செப்டா படித்து வருவதும் தெரிய வந்துள்ளது.

இதையும் படிக்க.. அமெரிக்காவில் வாழ ஆசைப்பட்டு இரட்டை வேடம் போட முயன்ற இளைஞர்

மாணவர்கள் அனைவரும் வெளியே மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, மாணவர்களிடம் கழிப்பறைக்குச் செல்வதாகக் கூறி வந்த ஓம் செப்டா திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த மாணவர்கள் வகுப்பறையில் ஓம் செப்டாவை தேடி வந்த போது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பள்ளி தலைமையாசிரியர் மாணவர் பற்றி கூறுகையில், நல்ல மாணவர் என்றும் படிப்பில் சிறந்து விளங்கி வந்தவர் என்றும், இப்படி ஒரு முடிவை அவர் எடுப்பார் என்று ஒருபோதும் கருதவில்லை என்றும் கூறியுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT