இந்தியா

5ஜி சேவை வழங்கப்படும் 50 இடங்களில் 30 குஜராத்!

14th Dec 2022 07:41 PM

ADVERTISEMENT


5 ஜி சேவை வழங்கப்படும் 50 நகரங்களின் பட்டியலில் 30 குஜராத் மாநிலத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் 3 நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்படுகிறது. 

கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 5ஜி சேவையைத் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அதன்படி,  14 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் இச்சேவை தொடங்கப்படவுள்ளது. 

நாட்டில் விரைவான தொலைத்தொடா்பு வசதிக்காகவும் தொலைத்தொடா்பு கட்டமைப்பை விரிவுப்படுத்தவும் அரசு பல்வேறு கொள்கை முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

படிக்கஇந்தியாவில் 5ஜி சேவை வழங்கப்படும் 50 நகரங்கள்: முழுப் பட்டியல்

ADVERTISEMENT

அலைக்கற்றை ஒதுக்கீடு, அலைக்கற்றை பங்கீடு மற்றும் பங்கீட்டின்போது கூடுதல் அலைக்கற்றை பயன்பாடு கட்டணத்தில் 0.5 சதவீதம் குறைப்பு, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், 5 ஜி சேவை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள 50 நகரங்களின் பட்டியலில் 30 நகரங்கள் குஜராத் மாநிலத்திற்குள்ளாகவே உள்ளது. 

அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் மும்பை, நாக்பூர், புணே ஆகிய நகரங்களிலும், மேற்கு வங்கத்தில்கொல்கத்தா, சிலிகுரி ஆகிய இரு நகரங்களிலும், உத்தரப் பிரதேசத்தில் வாராணசி, லக்னெள ஆகிய நகரங்களிலும் 5 ஜி சேவை தொடங்கப்படவுள்ளது. 

தமிழகத்தில் சென்னையில் மட்டுமே 5ஜி சேவை வழங்கப்படுகிறது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT