இந்தியா

உ.பி.யில் 16 நகரங்களில் 5,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்!

14th Dec 2022 06:06 PM

ADVERTISEMENT

 

லக்னௌ: உத்தரப் பிரதேசத்தில் 16 நகரங்களில் 5000 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

பாதுகாப்பான மற்றும் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவதற்கான மாநிலத்தின் உறுதிப்பாட்டை நிறைவேற்றும் வகையில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின்படி, பல்வேறு துறைகள் மற்றும் திட்டங்களின் கீழ் 16 நகரங்களில் 5000 சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளது. 

இந்த சிசிடிவியான சாலையின் ஒவ்வொரு சந்திப்பு, முக்கியச் சாலைகள், விரைவுச் சாலைகள், ரயில்வே மற்றும் மெட்ரோ நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT

ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மூலம் பாதுகாப்பான மற்றும் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கும் இலக்கை அடைய இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து முதல்வர் யோகி கூறுகையில், 

நமது நகரங்கள் இப்போது பாதுகாப்பாக மாறி வருகின்றன. நம் சகோதரிகள் மற்றும் மகள்களை ஒரு சந்திப்பில் துன்புறுத்தி, மற்றொரு சந்திப்பில் கொள்ளையடிக்கும் குற்றவாளிகளை  காவல்துறையினர் மூலம் உடனே  பிடிபடுவர். 

இத்திட்டம் மத்திய, மாநில அரசுகள் இணைந்து தொடங்கியுள்ளது. இது, கான்பூர், லக்னோ, ஆக்ரா, வாராணசி, பிரயாக்ராஜ், அலிகார், பரேலி, ஜான்சி, சஹாரன்பூர் மற்றும் மொராதாபாத் உள்ளிட்ட நகரங்களில் சிசிடிவிகளை நிறுவ மத்திய அரசு உதவியுள்ளது. மேலும், அயோத்தி, மதுரா-பிருந்தாவன், ஃபிரோசாபாத், மீரட், ஷாஜஹான்பூர், கோரக்பூர் மற்றும் காசியாபாத் ஆகிய இடங்களில் கேமராக்கள் பொருத்துவதற்கு மாநில அரசால் மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.

படிக்க: கிறிஸ்துமஸ், பொங்கல்: சிறப்பு கேக் வகைகளை அறிமுகம் செய்த ஆவின்!

ஸ்மார்ட் சிட்டி இயக்கத்தின் கீழ், நகர்ப்புற வளர்ச்சித்துறை கேமராவை நிறுவும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. விரைவு நெடுஞ்சாலைகள், சுங்கச்சாவடிகளில், ரயில் நிலையங்களில், ரயில்வே மற்றும் மெட்ரோ நிர்வாகத்தால் சிசிடிவிக்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. 

Tags : Uttar Pradesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT