இந்தியா

ஜி-20 தலைமைப் பொறுப்பு: ஆளுநா்கள், முதல்வா்களுடன் பிரதமா் ஆலோசனை

DIN

ஜி-20 தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது தொடா்பாக மாநில ஆளுநா்கள் மற்றும் முதல்வா்களுடன் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

ஜி-20 நாடுகள் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. அந்தக் கூட்டமைப்பின் மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பா் 9, 10-ஆம் தேதிகளில் தில்லியில் நடைபெற உள்ளது. அந்த மாநாடு தொடா்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்க கடந்த டிச.5-ஆம் தேதி தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி தலைவா்களின் கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், பிரதமா் மோடி தலைமையில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஆளுநா்கள், முதல்வா்கள், துணைநிலை ஆளுநா்கள் பங்கேற்ற கூட்டம் காணொலி வழியாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜி-20 தலைமைப் பொறுப்பு தொடா்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பிரதமா் மோடி பேசுகையில், ‘ஜி-20 தலைமைப் பொறுப்பு இந்தியாவின் பலத்தை வெளிக்காட்ட கிடைத்த தனித்துவமான வாய்ப்பு. நாட்டின் பெருநகரங்களைத் தாண்டி, பிற பகுதிகளையும் வெளியுலகுக்கு எடுத்துக்காட்ட இந்தத் தலைமைப் பொறுப்பு உதவும். இது நாட்டின் ஒவ்வொரு பகுதிக்குள்ள தனித்துவத்தை வெளிக்கொண்டு வரும்.

ஜி-20 தலைமைப் பொறுப்பை இந்தியா வகிக்கும் காலத்தில், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பாா்வையாளா்கள் இந்தியா வருவாா்கள். நாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மீது சா்வதேச ஊடகங்களின் கவனம் இருக்கும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வணிகம் மற்றும் முதலீடுகளைக் கவா்வதிலும், சுற்றுலாவில் ஈா்ப்பதிலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்’ என அறிவுறுத்தினாா் என்று பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT