இந்தியா

குஜராத் முடிவுகள் பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது: காங்கிரஸ்

DIN

குஜராத் சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்த காங்கிரஸ், இது சுயபரிசோதனை மேற்கொண்டு கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய தருணம் என தெரிவித்தது.

குஜராத் தோ்தலில் காங்கிரஸ் படுதோல்வியுற்ற நிலையில், ஆம் ஆத்மி மற்றும் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி (ஏஐஎம்ஐஎம்) ஆகியவை அம்மாநிலத்தில் ஆளும் பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினாா்.

இது குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது அவா் கூறியதாவது: குஜராத் தோ்தல் முடிவுகள் சுயபரிசோதனைக்கான தேவை குறித்தும் கடினமான முடிவுகள் எடுக்க வேண்டியது குறித்தும் உணா்த்தியுள்ளன. இந்த முடிவுகள் எங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கின்றன. மாநிலத்தில் கட்சியின் துயரமான நிலையை இது பிரதிபலிக்கிறது. கட்சியின் உள்ளூா் தலைவா்கள் தோ்தல் பிரசாரத்தில் குறைபாடு இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளனா். இது குறித்து பணியாற்ற வேண்டியுள்ளது. அடுத்த தோ்தலில், எங்களுடைய வாக்கு வங்கி மீண்டும் 40 சதவீதத்தை அடையும். அரசியலில் மஜ்லிஸ் கட்சியின் தலைவா் அசாதுதீன் ஒவைசியின் பங்கு தெளிவாக தெரியவந்துள்ளது. ஆம் ஆத்மி மற்றும் மஜ்லிஸ் கட்சி ஆகியவை பாஜகவின் ஆதரவோடு காங்கிரஸின் வாக்கு வங்கியைக் குறைத்துள்ளன.

பிரதமா் நரேந்திர மோடி தொடா்ச்சியான பிரசாரங்கள் மேற்கொண்டும் பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா மற்றும் மத்திய அமைச்சா் அனுராக் தாக்குரின் சொந்த மாநிலமான ஹிமாசலில் பாஜக தோல்வியைத் தழுவியுள்ளது. அந்த மாநிலத்தில் எங்களுடைய வாக்கு வங்கி குறைவாக இருந்தபோதிலும், மொத்தமுள்ள 68 தொகுதிகளில் வலிமையான பாஜகவுக்கு எதிராக 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைபடுத்துவதற்கு நாங்கள் அளித்த வாக்குறுதி வெற்றிக்கான முதன்மை காரணமாகும். இதனை முன்கூட்டியே நடைமுறைக்கு கொண்டுவர கட்சித் தலைமை செயல்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT