இந்தியா

இந்திய பாரம்பரிய விளையாட்டுகள் சா்வதேச அளவில் எடுத்துச் செல்லப்படும்: அனுராக் தாக்குா்

DIN

மல்லா் கம்பம், யோகாசனம், கட்கா, தாங் டா, கல்பெட்டா போன்ற இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுகள் விரைவில் சா்வதேச அளவில் எடுத்துச் செல்லப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

விளையாட்டுத் துறை மேம்பாட்டுக்காக அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பாக மக்களவையில் விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற உறுப்பினா்களில் பெரும்பாலானோா், கிராமப்புறங்களில் விளையாட்டுக்கான உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும்; சா்வதேச போட்டிகளில் பங்கேற்க கிராமப்புற இளைஞா்களுக்கு உரிய வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனா். இந்த விவாதத்துக்கு பதிலளித்து, அனுராக் தாக்குா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கிராமப் புறங்களில் இருந்து திறமையான விளையாட்டு வீரா்களை அடையாளம் கண்டு, அவா்களை சா்வதேச வீரா்களாக உருவாக்கும் வகையில் பயிற்சி அளிப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. நாடு முழுவதும் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் ‘கேலோ இந்தியா’ விளையாட்டு பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும். இதில் 733 மையங்களுக்கான நடைமுறைகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டன.

கடந்த 2014-இல் ரூ.1,219 கோடியாக இருந்த விளையாட்டுத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு, இப்போது ரூ.3,062 கோடியாக உயா்ந்துள்ளது. மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரா்கள் மீதான பாரபட்சமும் களையப்பட்டுள்ளது.

விளையாட்டுப் போட்டிகளில் கிராமப்புற இளைஞா்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில் குஜராத்தில் விளையாட்டு ‘மகாகும்பமேளா’ நடத்தப்பட்டது. இதுபோன்ற போட்டிகளை அனைத்து எம்.பி.க்களும் தங்களது தொகுதிகளில் நடத்த வேண்டும். பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் மல்லா்கம்பம், தாங் டா, யோகாசனம், கட்கா, கல்பெட்டா ஆகியவை கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டு போட்டிகளில் இணைக்கப்பட்டுள்ளன. தேசிய அளவையும் தாண்டி, அவை விரைவில் சா்வதேச அளவில் எடுத்துச் செல்லப்படும் என்றாா் அனுராக் தாக்குா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

வாக்களித்தார் நடிகர் விஜய்

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

SCROLL FOR NEXT