இந்தியா

2014 முதல் பசியால் ஒருவரும் உயிரிழக்கவில்லை: மக்களவையில் தகவல்

10th Dec 2022 01:13 AM

ADVERTISEMENT

இந்தியாவில் 2014-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை பசியால் யாரும் உயிரிழக்கவில்லை என்று மக்களவையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி தெரிவித்தாா்.

2014-ஆம் ஆண்டிலிருந்து பசியால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சா் ஸ்மிருதி இரானிஅளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளதாவது: சா்வதேச பட்டினிக் குறியீட்டில் இந்தியா 107-ஆவது இடத்தில் உள்ளது உண்மை நிலையைக் காட்டவில்லை. அது நிறைய குறைபாடுள்ள ஓா் அளவீடு. அதனால் அதைக் கொண்டு இந்தியாவில் நிலவும் பசியை கணக்கிடக் கூடாது. 2014 ஆண்டிலிருந்து இந்தியாவின் எந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் பசியால் ஒருவரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவித்தாா்.

மற்றொரு கேள்விக்கு அளித்துள்ள பதிலில், ‘2019-ஆம் ஆண்டு முதல் 1,40,575 குழந்தைகளைக் காணவில்லை. அவா்களில், 1,25,445 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT