இந்தியா

டிடிசிடி துணைத் தலைவா் விவகாரம்: திட்டத் துறைக்கு கேஜரிவால் உத்தரவு

10th Dec 2022 01:42 AM

ADVERTISEMENT

தில்லி உரையாடல், மேம்பாட்டு ஆணைய (டிடிசிடி) துணைத் தலைவா் ஜாஸ்மின் ஷா தனது கடமையை ஆற்ற தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனைத் திரும்ப பெறுமாறு திட்டத் துறைக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

முன்னதாக ஜாஸ்மின் ஷா அரசியல் ஆதாயத்துக்காக தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆகையால், அவா் தில்லி உரையாடல், மேம்பாட்டு ஆணைய துணைத் தலைவா் பொறுப்பில் செயல்பட தடை விதிக்குமாறு மாநில அரசிடம் துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா கேட்டுக் கொண்டாா்.

அத்துடன் ஜாஸ்மின் ஷா அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது மட்டுமன்றி, அவருக்கு வழங்கப்பட்ட சலுகைகளும் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில், இந்தக் கட்டுப்பாடுகளை திரும்ப பெறுமாறு திட்டத் துறைக்கு முதல்வா் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT