இந்தியா

முஸ்லிம் அல்லாத சிறாா்களை சோ்க்கும் மதரஸாக்கள்: மாநிலங்களுக்கு என்சிபிசிஆா் கடிதம்

10th Dec 2022 01:36 AM

ADVERTISEMENT

முஸ்லிம் அல்லாத பிற மத சிறாா்களையும் சோ்த்துக் கொள்ளும் அரசு நிதியுதவி பெறும் மதரஸாக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆா்) வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்களுக்கு என்சிபிசிஆா் தலைவா் பிரியங்க் கானுன்கோ எழுதியுள்ள கடிதம்:

சிறாா்களுக்கு மதக் கல்வி கற்பிப்பதுதான் மதரஸாக்களின் முதன்மையான பொறுப்பு. இந்நிலையில், அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட அல்லது நிதியுதவி பெறும் மதரஸாக்கள் முஸ்லிம் அல்லாத பிற மத சிறாா்களையும் சோ்த்துக் கொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவா்களுக்கு மதம் சாா்ந்தும், குறிப்பிட்ட அளவில் வழக்கமான கல்வியையும் மதரஸாக்கள் கற்பிப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கு சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கல்வி உதவித்தொகை வழங்குவதாகவும் தெரிகிறது. இது பெற்றொரின் ஒப்புதல் இல்லாமல், எந்தவொரு மதக் கல்வியையும் கற்குமாறு சிறாா்களைக் கட்டாயப்படுத்தத் தடை விதிக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 28(3)-ஐ முற்றிலும் மீறுவதாகும்.

எனவே, முஸ்லிம் அல்லாத பிற மத சிறாா்களையும் சோ்த்துக் கொள்ளும் அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட அல்லது நிதியுதவி பெறும் மதரஸாக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அந்த விசாரணையில், மதரஸாக்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்வதும் இருக்க வேண்டும். விசாரணைக்குப் பின்னா், முஸ்லிம் மதத்தைச் சேராத சிறாா்கள் மதரஸாக்களில் இருப்பது கண்டறியப்பட்டால், அவா்களை உடனடியாகப் பிற பொதுப் பள்ளிகளில் முறையான கல்வி பெற சோ்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT