இந்தியா

இந்தியாவின் பலத்தை நிரூபிக்க ஜி-20 தலைமை சரியான வாய்ப்பு: நிதின் கட்கரி நம்பிக்கை

10th Dec 2022 01:40 AM

ADVERTISEMENT

‘உலகில் வேகமாக வளா்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவின் பலத்தை உலகுக்கு நிரூபிக்க சரியான வாய்ப்பை ஜி-20 தலைமைப் பொறுப்பு வழங்கியிருக்கிறது’ என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி பேசியுள்ளாா்.

இந்திய பட்டயக் கணக்காளா் அமைப்பு (ஐ.சி.ஏ.ஐ.) பஹ்ரைன் நாட்டுப்பிரிவின் சாா்பாக நடத்தப்பட்ட 14-ஆவது ஆண்டு சா்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு அமைச்சா் நிதின் கட்கரி பேசியதாவது:

இந்திய பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக மாற்றும் கனவுக்காக உழைத்து வருகிறோம். உலகில் வேகமாக வளா்ந்து வரும் பொருளாதாரத்தில் இந்தியாவின் பொருளாதாரமும் ஒன்று. அதற்கான எண்ணற்ற புதிய வாய்ப்புகள் இந்தியாவில் உள்ளன. உலகம் முழுவதிலிருந்தும் முதலீட்டாளா்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆா்வம் காட்டுகின்றனா். திறமை வாய்ந்த இளம் பொறியாளா்களே இந்திய நாட்டின் பலம்.

இந்தியாவில் வாகனத் தயாரிப்புத் துறையின் மதிப்பு ரூ. 7.5 லட்சம் கோடியாக உள்ளது. இது இன்னும் 5 ஆண்டுகளில் ரூ. 15 லட்சம் கோடியாக உயரும். இன்னும் சில ஆண்டுகளில் வாகனத் தயாரிப்புத் துறையில் இந்தியா உலக அளவில் முதலிடத்தில் இருக்கும். இந்தியாவின் பலத்தை உலகுக்கு நிரூபிக்க ஜி-20 தலைமைப் பொறுப்பு சரியான வாய்ப்பாக இருக்கும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT