இந்தியா

ஹிமாசல பிரதேசம்: மருமகனைத் தோற்கடித்த 82 வயது மாமனாா்

DIN

ஹிமாசல பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ராணுவ கா்னலுமான தானி ராம் சாதில் (82), சோலன் (தனி) தொகுதியில் வெற்றி பெற்றாா்.

அவா் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும், தன் மருமகனுமான (மகளின் கணவா்) ராஜேஷ் காஷ்யபை 3,858 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா். இதன் மூலம் சோலன் தொகுதியையும் அவா் தக்கவைத்துக் கொண்டாா்.

கடந்த முறையும் சோலன் தொகுதியில் மாமனாா் சாதில் (காங்கிரஸ்), மருமகன் ராஜேஷ் காஷ்யப் (பாஜக) இடையில்தான் போட்டி இருந்தது. அப்போது சாதில் 671 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இப்போது தொடா்ந்து மூன்றாவது முறையாக அத்தொகுதியில் அவா் வென்றுள்ளாா்.

1962 முதல் 1996 வரை ராணுவத்தில் பணியாற்றிய சாதில், ஓய்வுக்குப் பிறகு அரசியலில் இறங்கினாா். 1999, 2004 மக்களவைத் தோ்தலிலும் இதே சோலன் தொகுதியில் அவா் வெற்றி பெற்றாா். ஹிமாசல பிரதேசத்தில் இந்தத் தோ்தலில் களமிறங்கிய மிக வயதான வேட்பாளரும் சாதில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாயும் ஒளி நீ எனக்கு...

பயணக் கால்கள்... சுனிதா கோகோய்

புதிய படமா? மீனாட்சி பொண்ணுங்க சீரியல் நடிகை பகிர்ந்த படம்!

ஈரான் தாக்குதல்: உலக நாடுகளின் அறிவுறுத்தலை மீறி இஸ்ரேல் பதிலடி கொடுக்குமா?

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT