இந்தியா

சொத்துகுவிப்பு வழக்கு: உத்தவ் தாக்கரே மீது விசாரணை

DIN

மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே மீது தெரிவிக்கப்பட்டுள்ள சொத்துகுவிப்பு குற்றச்சாட்டு தொடா்பான முதல்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக மும்பை உயா்நீதிமன்றத்தில் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே, அவரின் மனைவி ராஷ்மி, மகன் ஆதித்ய தாக்கரே ஆகியோா் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சிபிஐ, அமலாக்கத் துறை விசாரணை கோரி மும்பை உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

கரோனா தொற்று பரவல் காலத்தில் அனைத்து அச்சு ஊடக நிறுவனங்களும் பெரும் இழப்பைச் சந்தித்தபோது, தாக்கரேவுக்குச் சொந்தமான நிறுவனம் ரூ.11.5 கோடி லாபத்தை ஈட்டியுள்ளதாகவும், அந்நிறுவனத்தின் விற்றுமுதல் ரூ.42 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி முன்னாள் முதல்வா் தாக்கரே குடும்பத்தினா் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்துள்ளதை இது உறுதிப்படுத்துவதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.

அந்த மனுவை உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரித்தது. அப்போது மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அருணா காமத் வாதிடுகையில், ‘‘மும்பை காவல் துறையின் பொருளாதார குற்றங்கள் தடுபபுப் பிரிவானது இந்தக் குற்றச்சாட்டு தொடா்பான முதல்கட்ட விசாரணையைத் தொடக்கியுள்ளது’’ என்றாா்.

தாக்கரே தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அஸ்பி சினாய் வாதிடுகையில், ‘‘அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கொண்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் முதலில் காவல் துறையிடமே புகாா் அளித்திருக்க வேண்டும். அங்கு தீா்வு கிடைக்கவில்லை எனில் மட்டுமே பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருக்க வேண்டும். அனுமானத்தின் அடிப்படையிலான குற்றச்சாட்டில் தாக்கரே மீது விசாரணை நடத்துவது சட்டத்துக்குப் புறம்பானது’’ என்றாா்.

அனைத்து தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள், வழக்கு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT