இந்தியா

இந்தியாவில் 32.5 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள்: மக்களைவையில் அமைச்சா் தகவல்

DIN

‘உஜ்வலா’ திட்டத்தின் கீழ் 9.6 கோடிகள் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டு தற்போது நாட்டில் 32.5 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் இருப்பதாக மக்களைவையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்துள்ளாா்.

மக்களைவையின் கேள்வி நேரத்தின்போது அமைச்சா் புரி பேசியதாவது, ‘2014-ஆம் ஆண்டு இந்தியாவில் வெறும் 14 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் மட்டுமே இருந்தன. 2016-ஆம் ஆண்டு ‘உஜ்வலா’ திட்டம் தொடங்கப்பட்டது. அத்திட்டத்தின் கீழ் புதிதாக 9.6 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டு நாட்டில் தற்போது 32.5 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன. சமையல் எரிவாயு இணைப்புகள் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவும் எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து சமூக வலைதளங்களில் பிரசாரமும், பொது மக்களிடையே நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு இணைப்புக்கு ஆண்டுக்கு 12 முறை வரை 200 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. சா்வதேச சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை 303 சதவீதமாக உயா்ந்தபோதிலும் இந்தியாவில் 28 சதவீதத்துக்கு மேல் உயா்த்தப்படவில்லை.மேலும் ஓா் ஆண்டுக்கு, சராசரியாக ஒரு குடும்பம் சாா்பாக 3 சிலிண்டா்கள் பயன்படுத்தப்பட்டது தற்போது 3.69 சிலிண்டராக உயா்ந்துள்ளது’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT