இந்தியா

தெலங்கானாவில் ஒய்.எஸ்.ஷர்மிளா கைது!

9th Dec 2022 04:08 PM

ADVERTISEMENT

ஹைதராபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சித் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளாவை காவல்துறையினர் கைது செய்தனர். 

ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சித் தலைவரும் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானாவில் ஆட்சியில் உள்ள சந்திர சேகர் ராவின் தெலங்கானா ராஷ்டிர சமிதி அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். 

தெலங்கானாவில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். இதற்காக அவர் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். 

ADVERTISEMENT

கடந்த வாரம் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியபோது காரில் இருந்து இறங்க மறுத்ததால் காரோடு அவரை அகற்றி பின்னர் ஷர்மிளா கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதன் தொடர்ச்சியாக இன்று ஹைதராபாத் வாரங்கல் பகுதியில் போலீசார்  அனுமதி மறுத்ததை அடுத்து, அப்பகுதியில் அம்பேத்கர் சிலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரைகைது செய்து போலீசார் அழைத்துச் சென்றனர். 

இதையும் படிக்க | இறங்க மறுத்த ஒய்.எஸ்.ஷர்மிளா! காரை கிரேன் கொண்டு தூக்கிய காவல்துறை!! - நடந்தது என்ன?

ADVERTISEMENT
ADVERTISEMENT