இந்தியா

மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் பஞ்சாப் முதல்வர் சந்திப்பு

9th Dec 2022 06:39 PM

ADVERTISEMENT

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இன்று சந்தித்தார். 

இந்த சந்திப்பின்போது இருவரும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறியதாவது,  பஞ்சாப் எல்லை மாநிலம் என்பதால் மாநிலத்தின் பிரச்னைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தேன். 

இதையும் படிக்க- பிகார் முதல்வர் நிதீஷ் குமார் பதவி விலக வேண்டும்: ஆர்ஜேடி முன்னாள் எம்எல்ஏ

பல பிரச்னைகள் குறித்து விவாதித்தோம், எல்லையில் வேலி அமைப்பது தொடர்பான பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தப் பிரச்னைகள் அனைத்திற்கும் தீர்வு காண்பதாக அவர் உறுதியளித்தார், எங்கள் சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது". இவ்வாறு அவர் தெரிவித்தார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT