இந்தியா

சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

9th Dec 2022 10:33 AM

ADVERTISEMENT

 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழ பிராத்தனை செய்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

படிக்கஹிமாசலுக்கு யார் முதல்வர்? இன்று காங். எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

ADVERTISEMENT

 சோனியா காந்தி இரண்டு நாள்கள் பயணமாக ராஜஸ்தான் மாநிலத்திற்குச் சென்றுள்ளார். நேற்று ஜெய்ப்பூர் விமான நிலையம் வந்த அவர், ஹெலிகாப்டர் மூலம் மதோபூர் பகுதிக்குச் சென்றார். 

 

ஜெய்ப்பூரில் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் ஒற்றுமை நடைப்பயணம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருவதையொட்டி, சோனியா காந்தி  ஜெய்ப்பூர் வந்தார். 

தனியார் நட்சத்திர விடுதியில் சோனியா காந்தி தங்கியுள்ளதாகவும், பிறந்தநாள் விழா அங்கு நடைபெறும் எனவும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT