இந்தியா

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் பதவி விலக வேண்டும்: ஆர்ஜேடி முன்னாள் எம்எல்ஏ

9th Dec 2022 06:12 PM

ADVERTISEMENT

குர்ஹானி இடைத்தேர்தலில் தோல்வியடைந்ததற்காக பிகார் முதல்வர் பதவி விலக வேண்டும் என ஆர்ஜேடி முன்னாள் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். 

பிகார் மாநிலத்தின் குர்ஹானி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள மெகா கூட்டணி வேட்பாளர் மனோஜ் குஷ்வாஹாவை 3,632 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் கேதர் பிரசாத் குப்தா வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். 

இதையும் படிக்க- மாண்டஸ் புயல்: சென்னை புறநகர் ரயில்கள் இயக்கப்படுமா? - தெற்கு ரயில்வே விளக்கம்

இந்த நிலையில் குர்ஹானி இடைத்தேர்தலில் தோல்வியடைந்ததற்காக பிகார் முதல்வர் பதவி விலக வேண்டும் என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ அனில் குமார் சாஹினி தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது, இது மகாகத்பந்தன் தோல்வியல்ல, நிதிஷ் குமாரின் தோல்வி.

ADVERTISEMENT

அவருக்கு குர்ஹானி மக்கள் பாடம் புகட்டியுள்ளார்கள். நிதிஷ் குமார் ராஜிநாமா செய்துவிட்டு முதல்வர் பதவியை தேஜஸ்வி யாதவிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT