இந்தியா

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு எவ்வளவு தெரியுமா?

9th Dec 2022 08:34 PM

ADVERTISEMENT

5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு விபரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

நடைபெற்று வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார். 

அதன்படி கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தற்போது வரையிலான 5 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு மொத்தம் 36 அரசு முறை பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும், இவற்றில் 29 பயணங்களுக்கு மட்டும் மொத்தம் ரூ.239.04 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | துணிவு படத்தின் ‘சில்லா சில்லா' பாடல் வெளியானது!

ADVERTISEMENT

இதில் சமீபத்தில் ஜி20 மாநாட்டிற்காக இந்தோனேஷியா பயணம் மேற்கொண்டதற்காக ரூ.32,09,760 செலவிடப்பட்டதாகவும், ஜப்பான் பயணத்திற்கு ரூ.23,86,536 செலவிடப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொண்ட ஐரோப்பிய பயணத்திற்காக ரூ.2,15,61,304 மற்றும் செப்டம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்கப் பயணத்திற்கு ரூ.23,27,09,000 செலவிடப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT