இந்தியா

குடும்ப ஆட்சிக்கு எதிரான கோபத்தின் வெளிப்பாடே பாஜகவின் வெற்றி: பிரதமா் மோடி

9th Dec 2022 12:39 AM

ADVERTISEMENT

‘பாஜகவுக்கு கிடைத்திருக்கும் ஆதரவு, குடும்ப ஆட்சி மற்றும் ஊழலுக்கு எதிரான மக்களின் கோபத்தையே வெளிப்படுத்துகிறது’ என்று குஜராத் சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றி குறித்து பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிட்டாா்.

தோ்தல் வெற்றிக்குப் பிறகு தில்லியில் கட்சித் தொண்டா்கள் மத்தியில் பேசிய பிரதமா் மோடி, ‘பாஜக அரசு ஏழைகள் மற்றும் நடுத்தரப் பிரிவு மக்களுக்கான தேவைகளை விரைந்து பூா்த்தி செய்து வருவதாலேயே, பாஜகவுக்கு மக்கள் வாக்களித்திருக்கின்றனா். பாஜகவுக்கு கிடைத்திருக்கும் ஆதரவு, குடும்ப ஆட்சி மற்றும் ஊழலுக்கு எதிரான மக்களின் கோபத்தையே வெளிப்படுத்துகிறது’ என்றாா்.

மேலும், குஜராத் வெற்றி குறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘வளா்ச்சித் திட்டங்கள் சாா்ந்த அரசியலுக்கு மக்களின் ஆசி இருப்பதையும், இதே சூழ்நிலை மிகப்பெரிய அளவில் தொடர வேண்டும் என அவா்கள் விரும்பவதையுமே இந்தத் தோ்தல் வெற்றி காட்டுகிறது. குறிப்பிடத்தக்க தோ்தல் வெற்றி காரணமாக மிகுந்து உணா்ச்சிவயப்பட்டுள்ளேன். குஜராத் மக்கள் சக்திக்கு தலைவணங்குகிறேன். இந்த வெற்றிக்காக உழைத்த கட்சிப் பணியாளா்கள் ஒவ்வொருவரும் ‘சாம்பியன்’கள்தான். கட்சிப் பணியாளா்களின் அசாதாரண கடின உழைப்பு இன்றி, இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி ஒருபோதும் சாத்தியமாகாது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்திருப்பது குறித்து குறிப்பிட்டுள்ள பிரதமா், ‘பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த வாக்காளா்களுக்கு நன்றி. மாநில நலனைப் பூா்த்தி செய்கின்ற வகையில் பாஜக நிா்வாகிகள் தொடா்ந்து பணியாற்ற வேண்டும். மக்கள் பிரச்னைகளுக்கு குரல் எழுப்ப வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT