கர்நாடகத்தில் தனியார் பொறியியல் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் புர்கா அணிந்து மாணவர்கள் மேடையில் நடனமாடிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
மத உணர்வுகளை புண்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி புர்கா அணிந்து நடனமாடிய இளைஞர்களை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.
படிக்க | 2017-22-ல் அதிக செல்வங்களை உருவாக்கியவர்கள் அம்பானி, அதானி!
கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் மாணவர்கள் சிலர், புர்கா அணிந்தவாறு பாலிவுட் சினிமா திடைப்பட பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.
இந்த விடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வைரலானது. இதற்கு ஒருசிலர் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், மாணவர்களின் நடவடிக்கையை கண்டித்து கல்லூரி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு, தங்களின் நிர்வாகத்தின் சுட்டுரையிலும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
படிக்க | குஜராத்தில் காங்கிரஸ் அடைந்தது தோல்வியே அல்ல! அதற்கும் மேல்
அதில், இறையாண்மையை புண்படுத்தும் வகையிலான மாணவர்களின் செயலுக்கு கல்லூரி நிர்வாகம் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. புர்கா அணிந்து நடனமாடியவர்கள் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த மாணவர்கள். அவர்களிடம் உரிய விசாரணை நடத்தப்படும். மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் நடந்துகொண்ட மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மத உணர்வுகளுக்கு எதிரான செயல்களை கல்லூரி நிர்வாகம் ஊக்குவிப்பதில்லை என கல்லூரி முதல்வர் மருத்துவர். சுதீர் குறிப்பிட்டுள்ளார்.