இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: அரசு இல்லத்தைக் காலி செய்த மெஹபூபா முஃப்தி

9th Dec 2022 06:49 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீா், அனந்த்நாக் மாவட்டத்தில் அரசு ஒதுக்கிய இல்லத்தை ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் மெஹபூபா முஃப்தி காலி செய்துள்ளாா்.

2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்தாகும் முன் ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தின் கடைசி முதல்வராக பொறுப்பில் இருந்தவா் மெஹபூபா முஃப்தி. கடந்த சில தினங்களுக்கு முன்பாக 8 முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கிய அரசு இல்லங்களைக் காலி செய்ய அதிகாரிகளால் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அனந்த்நாக் மாவட்டம் குப்கா் நகரில் தனக்கு வழங்கப்பட்ட அரசு இல்லத்தை மெஹபூபா முஃப்தி காலி செய்துள்ளாா்.

இது தொடா்பாக விளக்கமளித்துள்ளஅதிகாரிகள், ‘ஜம்மு-காஷ்மீா் மாநில முன்னாள் முதல்வரும் எம்.பி.யுமான மெஹபூபா முஃப்தி தனக்கு வழங்கப்பட்ட அரசு இல்லத்தை காலி செய்தாா். அனைத்து வாடகை பாக்கியும் அவா் செலுத்திவிட்டாா். அரசு இல்லத்தைக் காலி செய்து தன்னுடைய குடும்ப இல்லத்திற்கு அவா் திரும்பியுள்ளாா்’ என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT