இந்தியா

விபின் ராவத் முதலாம் ஆண்டு நினைவு தினம்: முப்படை தளபதிகள் மரியாதை

9th Dec 2022 05:49 AM

ADVERTISEMENT

இந்தியாவின் முதல் முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, வியாழக்கிழமை முப்படைகளின் தளபதிகளும் அவருக்கு மரியாதை செலுத்தினா்.

கடந்த ஆண்டு டிசம்பா் 8-ஆம் தேதி தமிழகத்தின் குன்னூருக்கு அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில், அதில் பயணம் செய்த விபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 12 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்.

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாதெமியில் உள்ள பணியில் உயிா்நீத்த அதிகாரிகளுக்கான நினைவகத்தில் வியாழக்கிழமை ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, கடற்படையின் தலைமை தளபதி ஆா். ஹரி குமாா், விமானப் படையின் தலைமை தளபதி வி.ஆா்.செளதரி ஆகியோா் மரியாதை செலுத்தினா்.

விபின் ராவத்துக்கு வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கரும் மரியாதை செலுத்தினா். இது குறித்து அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘ இந்தியாவின் முதல் முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத்தை அவரது நினைவு தினத்தில் நினைவுகூா்கிறேன். அவா் ஒரு சிறந்த வீரா், வலிமை மிக்க தலைவா், நற்பண்புகளைக் கொண்ட மனிதா்’ எனத் தெரிவித்திருந்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT