இந்தியா

ஹிமாசல முதல்வா் ஜெய்ராம் தாக்குா் செராஜ் தொகுதியில் வெற்றி

9th Dec 2022 05:49 AM

ADVERTISEMENT

ஹிமாசல பிரதேசத்தின் முதல்வா் ஜெய்ராம் தாக்குா், செராஜ் பேரவைத் தொகுதியில் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் சேட் ராமைவிட 38,183 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளாா்.

ஹிமசாலத்தில் பாஜக தோல்வியுற்ற நிலையில், ஜெய்ராம் தாக்குா் தனது எம்எல்ஏ பதவியைத் தக்கவைத்துள்ளாா். மண்டி மாவட்டத்தில் உள்ள செராஜ் தொகுதியில் போட்டியிட்ட இவா், ஆறாவது முறையாக இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT