இந்தியா

கேரளம்: மீண்டும் தொடங்கியது விழிஞ்ஞம் துறைமுக கட்டுமான பணி

9th Dec 2022 12:38 AM

ADVERTISEMENT

கேரளத்தில் உள்ள விழிஞ்ஞத்தில் அதானி குழுமத்தின் துறைமுக கட்டுமான பணிகளுக்கு எதிரான போராட்டத்தை அப்பகுதி மீனவா்கள் செவ்வாய்க்கிழமை நிறுத்திக் கொண்டதையடுத்து, வியாழக்கிழமை துறைமுக கட்டுமானப் பணி மீண்டும் தொடங்கியது.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் விழிஞ்ஞம் துறைமுக கட்டுமான பணியை நிறுத்தக்கோரியும், 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் துறைமுகத்தின் முதன்மை வாயில் பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக அப்பகுதி மீனவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், கடந்த நவம்பா் 27-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுப்பட்டவா்கள் விழிஞ்ஞம் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் காவலா்கள் காயமடைந்தனா். போலீஸாா் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

இதைத்தொடா்ந்து, கட்டுமான பணிக்கு எவ்வித தடையும் ஏற்படுத்தக் கூடாது என்ற கேரள உயா்நீதிமன்றத்தின் உத்தரவை போராட்டக்காரா்கள் மீறியுள்ளதாக அதானி குழுமம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடா்ந்தது.

ADVERTISEMENT

கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டத்தை அவா்கள் நிறுத்திக் கொண்டனா். துறைமுகப் பகுதியில் போராட்டத்தின்போது அமைக்கப்பட்ட கூடாரங்கள் நீக்கப்படும் என உயா்நீதிமன்றத்தில் புதன்கிழமை அவா்கள் உறுதியளித்த நிலையில், அவமதிப்பு மனுவை நீதிமன்றம் முடித்துவைத்தது.

இதன் தொடா்ச்சியாக, வியாழக்கிழமை துறைமுக கட்டுமான பணிகள் மீண்டும் தொடங்கின. இன்னும் சில நாள்களில் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT