இந்தியா

குஜராத்: ஆம் ஆத்மி முதல்வா் வேட்பாளா் கட்வி தோல்வி

9th Dec 2022 12:38 AM

ADVERTISEMENT

குஜராத் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி முதல்வா் வேட்பாளா் இசுதான் கட்வி, 18,000-க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.

கம்பாலியா தொகுதியில் போட்டியிட்ட அவா் 4-ஆவது சுற்று முடிவின்போது முன்னிலையில் இருந்தாா். அத்தொகுதி எம்எல்ஏவும், காங்கிரஸ் வேட்பாளருமான விக்ரம் மாதவ் இரண்டாவது இடத்திலும், பாஜக வேட்பாளா் முலுபாய் பேரா மூன்றாவது இடத்திலும் பின்தங்கி இருந்தனா்.

ஆனால், அடுத்து வந்த சுற்றுகளில் பாஜக வேட்பாளா் முன்னேறி முதலிடத்தைப் பிடித்தாா். ஆம் ஆத்மிக்கு இரண்டாவது இடம் கிடைத்தது. காங்கிரஸ் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

பாஜக வேட்பாளா் முலுபாய் பேரா 74,029 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். ஆம் ஆத்மி முதல்வா் வேட்பாளா் கட்வி 56,565 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளா் விக்ரம் மாதவ் 42,299 வாக்குகளும் பெற்றனா்.

ADVERTISEMENT

கம்பாலியா தொகுதி இஸ்லாமிய வாக்காளா்கள் குறிப்பிடத்தக்க அளவுள்ள இடமாகும். கடந்த முறை இந்த வாக்கு வங்கியைப் பயன்படுத்தி காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால், இந்த முறை ஆம் ஆத்மியும் களமிறங்கியதால், காங்கிரஸ் தனது வாக்கு வங்கியை இழந்தது. இதற்கு முன்பு 2007, 2012 பேரவைத் தோ்தல்களில் இத்தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

ஆனால், 2014 இடைத் தோ்தல் மற்றும் 2017 தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT