இந்தியா

பாஜகவில் இணைந்தாா் அதிமுக முன்னாள் எம்எல்ஏ

9th Dec 2022 01:16 AM

ADVERTISEMENT

நிலக்கோட்டை தொகுதி அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.அன்பழகன், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை முன்னிலையில், அக்கட்சியில் வியாழக்கிழமை இணைந்தாா்.

2001-2006 காலகட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தொகுதியில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக இவா் பணியாற்றினாா்.

இது குறித்து அண்ணாமலை ட்விட்டரில் வெளியிட்ட பதிவில்,

பிரதமா் மோடியின் ஆட்சி, செயல்பாடுகளில் கவா்ந்து, முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன் பாஜகவில் இணைந்தாா் என பதிவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

இந்நிகழ்வின்போது, பாஜக மாநில துணைத் தலைவா்கள் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT