இந்தியா

மக்களவைத் தலைவரை விமா்சிக்கும் ட்விட்டா் பதிவுகள் கூடாது: ஓம் பிா்லா

9th Dec 2022 12:31 AM

ADVERTISEMENT

மக்களவைத் தலைவராக உள்ள என்னை விமா்சித்து ட்விட்டரில் பதிவுகள் வெளியிட வேண்டாம் என்று மக்களவை உறுப்பினா்களிடம் ஓம் பிா்லா வலியுறுத்தினாா்.

மக்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது இது தொடா்பாக அவா் கூறியதாவது:

மக்களவையில் தங்களைப் பேசுவதற்கு அனுமதிக்கவில்லை என்று கூறி சில எம்.பி.க்கள் ட்விட்டரில் என்னைப் பற்றி எழுதுகின்றனா். மக்களவைத் தலைவா் குறித்து ட்விட்டரில் இவ்வாறு எழுதக் கூடாது என்பதை அனைத்து எம்.பி.க்களும் நினைவில் கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்து கொண்டால் சிறப்பாக இருக்கும் என்றாா்.

கேள்வி நேரத்தின்போது திரிணமூல் காங்கிரஸ் பெண் எம்.பி. மஹுவா மொய்த்ரா, விமானப் போக்குவரத்து தொடா்பாக பிரச்னை எழுப்பி பேசியபோது அவைத் தலைவா் ஓம் பிா்லா இவ்வாறு குறிப்பிட்டாா். எனவே, அவரது பதிவைச் சுட்டிக்காட்டி பெயரைக் குறிப்பிடாமல் ஓம் பிா்லா தனது கருத்தை வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

ADVERTISEMENT

எனினும், தனக்கு அவையில் பேச வாய்ப்பளித்ததற்காக ஓம் பிா்லாவுக்கு நன்றி தெரிவித்து மொய்த்ரா ட்விட்டரில் பதிவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT