இந்தியா

குஜராத் தேர்தல் மூலம் ஆம் ஆத்மிக்கு தேசிய கட்சி அந்தஸ்து கிடைக்கும்: மணீஷ் சிசோடியா

DIN

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் ஆம் ஆத்மி கட்சியை தேசிய அளவில் உயர்த்தும் என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வியாழக்கிழமை கூறினார். 

குஜராத் வாக்குகள் மூலம் ஆம் ஆத்மி தேசிய கட்சியாக மாறுகிறது. முதல்முறையாக கல்வி மற்றும் சுகாதாரம் சார்ந்த அரசியலுக்கு நாட்டில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்திய மக்களுக்கு வாழ்த்துகள் என சிசோடியா ட்வீட் செய்துள்ளார். 

தில்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி மாநிலக் கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. மேலும் தேசியக் கட்சியாக மாறுவதற்கான விதி 2022 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தது. 

ஒரு அரசியல் கட்சி தேசியக் கட்சியாகக் குறைந்தது நான்கு மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட வேண்டும். மாநிலத்தில் கட்சி அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், குறைந்தபட்சம் 2 இடங்களில் 6 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். 

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு, ஆம் ஆத்மி கட்சி குஜராத், தில்லி, பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் மாநிலக் கட்சியாக மாறி, தேசியக் கட்சியாக மாறும் என்று அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT