இந்தியா

மோர்பி தொகுதியில் யார் முன்னிலை?

8th Dec 2022 01:10 PM

ADVERTISEMENT

குஜராத் மாநிலம் தொங்கு பால விபத்து நடைபெற்ற மோர்பி தொகுதியில் பாஜக முன்னிலையில் உள்ளது.

குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு கடந்த 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி என்று காலை முதல் நடைபெற்று வருகின்றது.

இதில், மச்சு நதியின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்து 135 பேரை பலி வாங்கிய மோர்பி தொகுதியும் அடங்கும். இந்த தொகுதியின் வெற்றியை நாடே எதிர்நோக்கியுள்ளது.

இதையும் படிக்க | குஜராத்தில் வரலாறு காணாத வெற்றியை நோக்கி பாஜக!

கடந்த முறை பாஜக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த பிரிஜேஷ் மெர்ஜாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. மாறாக, தொங்கு பாலம் விபத்து ஏற்பட்ட போது ஆற்றில் குதித்து உயிருக்கு போராடியவர்களை மீட்ட முன்னாள் எம்எல்ஏ காண்டிலால் அம்ருதியா வாய்ப்பளித்தது பாஜக.

ADVERTISEMENT

அவருக்கு எதிராக காங்கிரஸிலிருந்து படேல் ஜெயந்திலால் ஜெராஜ்பாய் என்பவர் களமிறக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே மோர்பி பாஜக வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார். பாஜக வேட்பாளர் 70502 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் 38269 வாக்குகளும் 1 மணி நிலவரப்படி பெற்றுள்ளனர்.

இந்த தொகுதியில் பாஜக வேட்பாளருக்கே வெற்றி வாய்ப்பு காணப்படுகிறது.

மேலும், 182 தொகுதிகளில் 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று பாஜக வரலாற்று வெற்றியை பதிவு செய்ய காத்திருக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT