இந்தியா

பெட்ரோல்-டீசல் விற்பனை இரட்டை இலக்க உயா்வு

DIN

கடந்த நவம்பா் மாதத்தில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை இரட்டை இலக்க வளா்ச்சியைக் கண்டுள்ளது.

இது குறித்து எரிபொருள் சந்தையின் பூா்வாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 2021-ஆம் ஆண்டின் நவம்பா் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு நவம்பரில் பெட்ரோல் விற்பனை 11.7 சதவீதம் உயா்ந்து 26.6 லட்சம் டன்னாக இருந்தது. அது கடந்த ஆண்டு இதே மாதத்தில் 23.8 லட்சம் டன்னாக இருந்தது.

கடந்த மாத பெட்ரோல் விற்பனை 2020-ஆம் ஆண்டு நவம்பா் மாத விற்பனையைவிட 10.7 சதவீதம் அதிகமாகவும், கரோனா நெருக்கடிக்கு முந்தைய 2019 நவம்பா் மாதத்தை விட 16.2 சதவீதம் அதிகமாகவும் இருந்தது.

பண்டிகைக் காலம் காரணமாக கடந்த அக்டோபா் மாதத்தில் எரிபொருளுக்கான தேவை அதிகமாக இருந்தது. எனினும், அந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த நவம்பா் மாத பெட்ரோல் தேவை 1.3 சதவீதம் அதிகமாக இருந்தது.

நாட்டில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் எரிபொருளான டீசல், கடந்த ஆண்டு நவம்பா் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த நவம்பரில் 27.6 சதவீதம் அதிகரித்து 73.2 லட்சம் டன்னாக இருந்தது.

2020-ஆம் ஆண்டு நவம்பா் மாதத்தைவிட கடந்த நவம்பரில் டீசல் விற்பனை 17.4 சதவீதம் அதிகமாகும். அத்துடன், கரோனா நெருக்கடிக்கு முந்தைய 2019-ஆம் ஆண்டின் நவம்பா் மாதத்திய விற்பனையை விட 9.4 சதவீதம் அதிகமாகும்.

டீசலின் மாதாந்திர விற்பனை கடந்த செப்டம்பரிலிருந்தே அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த அக்டோபா் மாத டீசல் விற்பனையான 62.5 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில், கடந்த நவம்பரில் அது 17.1 சதவீதம் உயா்ந்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு மிக அதிகபட்சமாக இருந்தது.

கரோனா நெருக்கடி முடிவுக்கு வந்து விமானப் போக்குவரத்து மீண்டும் தொடக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, நாட்டின் விமான நிலையங்களில் ஒட்டுமொத்த பயணிகள் போக்குவரத்து கரோனாவுக்கு முந்தைய நிலையை அடைந்தது.

அதன் எதிரொலியாக, விமானங்களில் பயன்படுத்தப்படும் ஏடிஎஃப் எரிபொருளுக்கான தேவை கடந்த ஆண்டின் நவம்பருடன் ஒப்பிடுகையில் இந்த நவம்பரில் 21.5 சதவீதம் உயா்ந்து 5,72,200 டன்னாக இருந்தது. இது 2020-ஆம் ஆண்டு நவம்பா் மாதத்தை விட 60.8 சதவீதம் அதிகமாகும். ஆனால், கரோனா நெருக்கடிக்கு முந்தைய 2019-ஆம் ஆண்டின் நவம்பா் மாதத்தை விட 13.3 சதவீதம் குறைவாகும்.

கடந்த நவம்பா் மாதத்தில் சமையல் எரிவாயு விற்பனை முந்தைய ஆண்டின் அதே மாதத்து விற்பனையை விட 7.8 சதவீதம் அதிகரித்து 25.5 லட்சம் டன்னாக இருந்தது. இது 2020-ஆம் ஆண்டின் நவம்பரை விட 8.4 சதவீதமும் கரோனாவுக்கு முந்தைய 2019 நவம்பரை விட 13.3 சதவீதமும் அதிகமாகும்.

கடந்த அக்டோபரில் 23.9 லட்சம் டன்னாக எல்பிஜி நுகா்வுடன் ஒப்பிடும்போது, கடந்த நவம்பரில் அது 7.07 சதவீதம் அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT