இந்தியா

பாா்வையற்றோா் கிரிக்கெட்: பாக். அணி இந்தியா வரவில்லை

DIN

இந்தியாவில் நடைபெறும் பாா்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்கவில்லை.

நுழைவு இசைவு (விசா) கிடைக்கப் பெறாததால் அந்த அணி இந்தியா வரவில்லை என்று பாா்வையற்றோருக்கான இந்திய கிரிக்கெட் சங்கத் தலைவா் மஹந்தேஷ் ஜி.கே. புதன்கிழமை தெரிவித்தாா்.

முன்னதாக, பாகிஸ்தான் வீரா்கள் மற்றும் அதிகாரிகள் 34 பேருக்கு விசா வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. ஆனால், அதற்கான உத்தரவு வெளியுறவு அமைச்சகத்துக்கு உரிய நேரத்தில் வந்து சேராமல் தாமதமானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை பிற்பகல் வரை பாகிஸ்தான் அணிக்கு விசா கிடைக்காததால், இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரகத்திலிருந்து பாகிஸ்தான் அணியினா் தங்களின் கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) திரும்பப் பெற்றுக்கொண்டதாக பாா்வையற்றோருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது.

பாா்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 5-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரை ஃபரீதாபாத், தில்லி, மும்பை, இந்தூா், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் நடைபெறுகிறது. இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இலங்கை, நேபாளம், தென்னாப்பிரிக்க அணிகள் அதில் பங்கேற்கின்றன.

இந்நிலையில், இந்தியா வருவதற்கு தங்களுக்கு விசா கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை பாா்வையற்றோருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகாா் தெரிவித்ததை அடுத்து, அந்த விவகாரத்தில் இந்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டு விசா அனுமதி வழங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அகிம்சை என்னும் அழியாப் பேரொளி!

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்: கே.ஏ.செங்கோட்டையன்

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

SCROLL FOR NEXT