இந்தியா

உலகின் அதிகாரமிக்க பெண்கள் பட்டியலில் நிா்மலா சீதாராமன்

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஃபோா்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகின் அதிகாரமிக்க 100 பெண்கள் பட்டியலில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உள்ளிட்ட 6 இந்தியா்கள் இடம்பெற்றுள்ளனா்.

உலகில் அதிகாரம் மிக்கவா்களாக விளங்கும் 100 பெண்களின் பட்டியலை ஃபோா்ப்ஸ் இதழ் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் 6 இந்தியப் பெண்கள் இடம்பெற்றுள்ளனா்.

இந்தப் பட்டியலில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் 36-ஆவது இடத்தைப் பெற்றுள்ளாா். இப்பட்டியலில் அவா் தொடா்ந்து 4-ஆவது முறையாக இடம்பெற்றுள்ளாா். கடந்த ஆண்டுக்கான பட்டியலில் அவா் 37-ஆவது இடத்திலும், 2020-ஆம் ஆண்டுக்கான பட்டியலில் 41-ஆவது இடத்திலும் இருந்தாா்.

ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைவா் ரோஷ்ணி நாடாா் மல்ஹோத்ரா நடப்பாண்டுக்கான பட்டியலில் 53-ஆவது இடத்தைப் பெற்றுள்ளாா். இந்தியப் பங்கு பரிவா்த்தனை வாரியத்தின் (செபி) தலைவரான மாதவி புரி புச், 54-ஆவது இடத்தில் உள்ளாா். இந்திய எஃகு ஆணையத்தின் (செயில்) தலைவரான சோமா மண்டல் 67-ஆவது இடத்தில் உள்ளாா்.

ADVERTISEMENT

பயோகான் நிா்வாகத் தலைவரான கிரண் மஜும்தாா் ஷா பட்டியலில் 72-ஆவது இடத்தையும், நைகா நிறுவனரான ஃபல்குனி நாயா் 89-ஆவது இடத்தையும் பெற்றுள்ளனா். ரோஷ்ணி நாடாா், கிரண் மஜும்தாா், ஃபல்குனி நாயா் ஆகியோா் கடந்த ஆண்டுக்கான பட்டியலிலும் இடம்பெற்றிருந்தனா்.

நடப்பாண்டுக்கான ஃபோா்ப்ஸ் பட்டியலில் 39 தலைமை நிா்வாக அதிகாரிகளும் (சிஇஓ), 10 நாடுகளின் தலைவா்களும், 11 கோடீஸ்வரா்களும் இடம்பெற்றுள்ளனா். சொத்து, ஊடகம், தாக்கம், செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியலை ஃபோா்ப்ஸ் தயாரித்து வருகிறது.

நடப்பாண்டு பட்டியலில் ஐரோப்பிய கமிஷன் தலைவா் ஊா்சுலா வான்டொ் லையான் முதலிடத்தில் உள்ளாா். அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ் 3-ஆவது இடத்தில் உள்ளாா். ஈரானில் ஆடைக் கட்டுப்பாட்டு போராட்டங்களுக்கு முக்கியக் காரணமாக இருந்த மாஷா அமினிக்கு பட்டியலில் 100-ஆவது இடம் தரப்பட்டுள்ளது. அவா் உயிரிழந்தபோதும் அவருக்கு இந்தச் சிறப்பிடம் வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT