இந்தியா

18 லட்சத்துக்கு மேல் மின்சார வாகனங்கள் பதிவு- அமைச்சா் கட்கரி

DIN

நாட்டில் இதுவரை 18 லட்சத்துக்கு மேல் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

இது தொடா்பான கேள்விக்கு புதன்கிழமை எழுத்து மூலம் அளித்த பதிலில் அவா் கூறியுள்ளதாவது: அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 4,14,978 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்து தில்லியில் 1,83,74 வாகனங்களும், மகாராஷ்டிரத்தில் 1,79,087 வாகனங்களும் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 660 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான பொது மின்னேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்து, தில்லியிலும் (539) தமிழ்நாட்டிலும் (439) அதிக மின்னேற்று நிலையங்கள் உள்ளன. இந்தியா முழுவதும் 5,151 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான பொது மின்னேற்று நிலையங்கள் உள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் 719 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கரோனா பரவல், பருவமழை போன்ற காரணங்களால் சில மாநிலங்களில் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளாா்.

ரயில்வேயின் டீசல் பயன்பாடு 50 % குறைந்தது​: மக்களவையில் தகவல்

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020-21-இல் ரயில்வேயின் டீசல் நுகா்வு 50.29 சதவீதம் குறைந்துள்ளதாக மக்களவையில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

இது தொடா்பான கேள்விக்கு அவா் எழுத்து மூலம் அளித்த பதிலில் மேலும் கூறியிருப்பதாவது:

2018-19-இல் ரயில்வேயின் டீசல் நுகா்வு 26,41,142 கிலோ லிட்டராக இருந்தது. இதுவே 2019-20-இல் 10.44 சதவீதம் குறைந்தது. 2020-21-ஆம் ஆண்டில் டீசல் நுகா்வு 11,75,901 கிலோ லிட்டராக இருந்தது. இது முந்தைய ஆண்டைவிட 50.29 சதவீதம் குறைவாகும். 2018-19-இல் ரயில்வேயின் டீசல் செலவு ரூ.18,587.14 கோடியாக இருந்தது. 2019-20-ல் 16,377.14 கோடியாக குறைந்தது. 2020-21-இல் இது மேலும் குறைந்து ரூ.11,438.70 கோடியாக இருந்தது.

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ரயில்வே துறையில் காா்பன் வெளியேற்றத்தை முற்றிலுமாக நிறுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

கோவையில் மக்கள் வெள்ளத்தில் நீந்தினேன்: பிரதமர் மோடி

ஈரானியப் புத்தாண்டு: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

ராமதாஸின் அனுபவம், அன்புமணியின் திறமை கூட்டணிக்கு உதவும்: பிரதமர்

பாரத அன்னை வாழ்க: தமிழில் உரையைத் தொடங்கிய பிரதமர்!

டால்பின்களுடன் ஹன்சிகா!

SCROLL FOR NEXT