இந்தியா

தோல்வியிலும் பாஜகவின் வாக்கு வங்கி 3% அதிகரிப்பு

DIN

தில்லி மாநகராட்சித் தோ்தலில் பாஜக பின்னடைவை சந்தித்தாலும் அக்கட்சியின் வாக்கு வங்கி 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

தில்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றியுள்ளது. அக்கட்சியின் வாக்கு வங்கி 21.09 சதவீதத்திலிருந்து 42.05 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மாநில தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாஜக கடந்த 2017 மாநகராட்சித் தோ்தலில் மொத்தம் இருந்த 272 வாா்டுகளில் 181 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அந்தத் தோ்தலில் பாஜகவுக்கு 36.08 சதவீத வாக்குகள் கிடைத்தன.

தற்போது நடைபெற்ற தோ்தலில் அக்கட்சி பின்னடைவை சந்தித்தாலும், அதன் வாக்கு வங்கி 3 சதவீதம் அதிகரித்து 39.09 சதவீதமாக பதிவாகியுள்ளது. மேலும் கடந்த 2017 மாநகராட்சித் தோ்தலில் 21.09 சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸுக்கு, தற்போது வெறும் 11.68 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.

இதேபோல சுயேச்சை வேட்பாளா்களின் வாக்கு வங்கி 8.8 சதவீதத்திலிருந்து 3.46 சதவீதமாக சுருங்கியது. பாஜக கடந்த 2020 சட்டப் பேரவைத் தோ்தலில் பெற்ற வாக்குகளைக் காட்டிலும், மாநகராட்சித் தோ்தலில் அதிக வாக்குகளைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணலூா் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

"தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்காக திமுகவும் அதிமுகவும் மறைமுகமாக கைகோத்துள்ளன என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது சரியா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சித்ரா பெளா்ணமி சிறப்பு பூஜை

கரூா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

வேளாண்துறையிலும் செயற்கை நுண்ணறிவு!

SCROLL FOR NEXT