இந்தியா

ஹிமாசல் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் 6-வது முறையாக வெற்றி!

DIN

ஹிமாசல பிரதேசத்தில் செராஜ் தொகுதியில் 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தொடர்ந்து 6 ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். 

ஹிமாசல பிரதேசத்தில் 68 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு நவம்பா் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று(டிச. 8) காலை முதல் நடைபெற்று வருகின்றது.

தொடக்கத்தில் பாஜக முன்னிலை வகித்த நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில் தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு 35 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் காங்கிரஸ் தற்போது 38 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 27 இடங்களிலும் பிற கட்சிகள் 3 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. ஆம் ஆத்மி எந்த தொகுதியிலும் இதுவரை முன்னிலை பெறவில்லை.

இந்நிலையில் தற்போது ஹிமாசலில் பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து 6 ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். தாக்கூர் 52,076 வாக்குகள் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சேத் ராம் 15,069 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். 

முன்னதாக தாக்கூர் 1998, 2003, 2007, 2012, 2017 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் இதே தொகுதியில் நின்றி வெற்றி கண்டார்.

கடந்த முறை காங்கிரஸ் வேட்பாளர் சேத் ராமைவிட தாக்கூர் 11,000 வாக்குகள் கூடுதலாக பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

வாக்குச்சாவடி மையம் கேட்டு வாக்களிக்க மறுத்த கிராம மக்கள்

SCROLL FOR NEXT