இந்தியா

தில்லி மாநகராட்சியில் 67 சதவிகித கோடீஸ்வர கவுன்சிலர்கள்

8th Dec 2022 08:42 PM

ADVERTISEMENT

தில்லி மாநகராட்சித் தேர்தலில் வென்ற கவுன்சிலர்களில் 67 சதவிகிதத்தினர் கோடீஸ்வரர்கள் என ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒருங்கிணைந்த தில்லி மாநகராட்சித் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 250 வாா்டுகளில் 134 வாா்டுகளை கைப்பற்றியுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக 104 இடங்களையும், காங்கிரஸ் 9 இடங்களையும் கைப்பற்றியது. எஞ்சிய 3 இடங்களை சுயேட்சை வேட்பாளர்கள் வென்றனர். 

இந்நிலையில் தில்லியில் புதிதாக தேர்வான மாநகராட்சி உறுப்பினர்களில் 7 சதவிகிதத்தினர் கோடீஸ்வரர்கள் என ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. 

இதையும் படிக்க | ஹிமாசலில் ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ்!

ADVERTISEMENT

கடந்த 2017ஆம் ஆண்டு தேர்வான மொத்த உறுப்பினர்களில் 51 சதவிகிதத்தினர் கோடீஸ்வரர்களாக இருந்த நிலையில் தற்போது இதுவே 67 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 

புதிதாக தேர்வான 248 பேரில் 167 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளதாக தெரிவித்துள்ள அந்த அறிக்கையானது இவர்களில் 82 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் சொத்து மதிப்பு ஒரு கோடிக்கும் மேல் எனவும் இது மற்ற அரசியல் கட்சியினரை விட அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆம் ஆத்மி கட்சியைப் பொறுத்தவரை 132 பேர் கோடீஸ்வரர்கள் எனவும் இவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.3.56 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | தீவிர புயலாக மாறியது 'மாண்டஸ்'

அதேபோல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்ற 9 பேரின் மொத்த சொத்துமதிப்பு ரூ.4.09 கோடி எனவும் சுயேட்சை உறுப்பினர்கள் மூவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.5.53 கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT