இந்தியா

ஹிமாசலில் காங். 10 இடங்களில் வெற்றி; மேலும் 29 இடங்களில் முன்னிலை

DIN

ஹிமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகவும் 29 இடங்களில் முன்னிலை வகிப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

68 இடங்களைக் கொண்ட ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைக்கு நவம்பா் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று(டிச. 8) காலை முதல் நடைபெற்று வருகின்றது.

தொடக்கத்தில் பாஜக முன்னிலை வகித்த நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில் தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. 

பெரும்பான்மைக்கு 35 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் காங்கிரஸ் 10 தொகுதிகளில் வெற்றி பெற்று மேலும் 29 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 

பாஜக 9 இடங்களில் வெற்றி பெற்று 17 இடங்களில் முன்னிலையிலும் பிற கட்சிகள் 3 இடங்களில் முன்னிலையிலும் உள்ளன. ஆம் ஆத்மி எந்த தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹிமாசல பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ள நிலையில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT