இந்தியா

ஹிமாசலில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை!

DIN

ஹிமாசல பிரதேசம் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகின்றது.

ஹிமாசல பிரதேசத்தில் 68 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு நவம்பா் 12-ஆம் தேதி ஒரே கட்டமாகவும் தோ்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றது.

தொடக்கத்தில் பாஜக முன்னிலை வகித்த நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்க தொடங்கியுள்ளது. பெரும்பான்மைக்கு 35 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், நீண்ட நேரமாக காங்கிரஸ் 36 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

பாஜக 29 இடங்களில், பிற கட்சிகள் 3 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி எந்த தொகுதியிலும் இதுவரை முன்னிலை பெறவில்லை.

ஹிமாசல பிரதேசத்தை பொறுத்தவரை 1985ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவரை ஆட்சியிலிருக்கும் கட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

SCROLL FOR NEXT