இந்தியா

குஜராத்தில் 7வது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக

DIN

குஜராத்தில் 150-க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று 7வது முறையாக ஆட்சியமைக்கிறது.

குஜராத் மாநிலத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என அறிவிப்பு வெளியான நாள் முதலே அரசியல் களம் பரபரப்புக்கு பஞ்சமின்றி காணப்பட்டது.குஜராத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். பல ஆண்டுகளாக பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே குஜராத்தில் இருமுனைப் போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில், இம்முறை புதியப் போட்டியாளராக ஆம் ஆத்மி களமிறங்மியது. இதனால், மாநிலத்தில் இருமுனைப் போட்டி மும்முனைப் போட்டியாக மாறியது. 

அனைத்துக் கட்சியினரும் தேர்தலில் போட்டியிடும் தங்களது வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு வந்தனர். வேட்பாளர்கள் பட்டியலில் சில நட்சத்திர வேட்பாளர்களும் இடம் பெற்றனர். பாஜக சார்பில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா ஜாம்நகர் வடக்குத் தொகுதியில் போட்டியிட்டார். அதேபோல ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் வேட்பாளராக தொலைக்காட்சித் தொகுப்பாளர் இசுதான் காட்வி அறிவிக்கப்பட்டார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று (டிசம்பர் 8) காலை முதலே வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. 

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. மோர்பி பால விபத்து பெரிய அளவில் ஆளும் பாஜகவுக்குப் பின்னடைவைத் தரும் எனக் கூறப்பட்ட நிலையிலும் பாஜகவின் வெற்றிக்கு அந்த விபத்து பெரிய தடையாக இல்லை. 

பாஜக 155 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 5 தொகுதிகளிலும், சமாஜவாதி 1 தொகுதியிலும், தனித்து போட்டியிட்டவர்கள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். ஏறக்குறைய அனைத்துத் தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை முடிந்துவிட்ட நிலையில், ஒரு தொகுதியில் மட்டும் பாஜக முன்னிலை தொடர்ந்து வருகிறது.

பாஜக 52.5 சதவிகித வாக்குகளையும், காங்கிரஸ் 27.3 சதவிகித வாக்குகளையும், ஆம் ஆத்மி 12.9 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளது.

இதன்மூலம், பாஜக பெரும்பான்மையுடன் குஜராத்தில் 7வது முறையாக மீண்டும் ஆட்சியமைக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் துறையினா் கொடி அணி வகுப்பு

சின்னம் ஒதுக்கீட்டில் தோ்தல் ஆணையம் பாரபட்சம் -இரா. முத்தரசன் பேச்சு

வாக்களிப்பின் அவசியம் உணா்த்த ஆட்சியரகத்தில் ராட்சத பலூன்

தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வைக்கோல் போருக்கு தீ வைத்த 2 போ் கைது

SCROLL FOR NEXT