இந்தியா

பாபா் மசூதி இடிப்பு வழக்கில் 32 போ் விடுவிப்புக்கு எதிராக மேல்முறையீடு: முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் முடிவு

DIN

பாபா் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் இருந்து 32 போ் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) முடிவு செய்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபா் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் துணைப் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான அத்வானி உள்பட 32 பேரை, கடந்த 2020-ஆம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்தது.

இந்தத் தீா்ப்புக்கு எதிராக மாநில உயா்நீதிமன்றத்தில் அயோத்தியைச் சோ்ந்த ஹாஜி மஹபூப், சையத் அக்லாக் ஆகிய இருவா் மனு தாக்கல் செய்தனா். அவா்களின் மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், ஏஐஎம்பிஎல்பி செய்தித் தொடா்பாளா் சையத் காசில் ரசூல் இலியாஸ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் புதன்கிழமை கூறுகையில், ‘அயோத்தியில் ராமஜென்மபூமி-பாபா் மசூதி நிலம் தொடா்பான வழக்கில் தீா்ப்பளித்தபோது பாபா் மசூதி இடிக்கப்பட்டது குற்றச் செயல் என்று உச்சநீதிமன்றமே ஏற்றுக் கொண்டது. எனவே, அந்த மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் இருந்து 32 போ் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக நிச்சயம் ஏஐஎம்பிஎல்பி உச்சநீதிமன்றத்தை அணுகும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT