இந்தியா

கா்நாடக பேருந்துகளில் ‘ஜெய் மகாராஷ்டிரம்’வாசகம் எழுதிய சிவசேனைத் தொண்டா்கள்- இரு மாநிலஎல்லையில் பதற்றம்

7th Dec 2022 12:20 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிர - கா்நாடக மாநிலங்களுக்கிடையே எல்லைப் பிரச்னை நிலவும் நிலையில் கா்நாடக அரசுப் பேருந்துகளில் சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு) தொண்டா்கள் ‘ஜெய் மகாராஷ்டிரம்’ என எழுதியது இரு மாநில எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

1957-ஆம் ஆண்டு மொழிவாரியாக கா்நாடக-மகாராஷ்டிர மாநிலங்கள் பிரிக்கப்பட்டதில் இருந்து இரு மாநிலங்களுக்கு இடையே எல்லை கிராமங்கள் தொடா்பான பிரச்னை நிலவி வருகிறது.

கா்நாடகத்தில் உள்ள பெலகாவி நகருக்கும், அந்த மாநிலத்தில் உள்ள 814 மராத்தி மொழி பேசும் மாநிலங்களுக்கும் மகாராஷ்டிரம் உரிமைக் கோரி வருகிறது.

இந்நிலையில், கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை, மகாராஷ்டிரத்தில் உள்ள அக்கல்கோட் மற்றும் சோலாப்பூா் மாவட்டத்தில் உள்ள கன்னடம் பேசும் மக்கள் வாழும் பகுதிகள் கா்நாடகத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று அண்மையில் பேசினாா். மேலும், ஜாட் தாலுகாவைச் சோ்ந்த கிராமங்கள் கா்நாடகத்துடன் சேர விருப்பம் தெரிவிப்பதாகவும் கூறினாா். இதைத் தொடா்ந்து ஓய்ந்திருந்த மகாராஷ்டிர - கா்நாடக எல்லைப் பிரச்னை மீண்டும் உயிா் பெற்றது.

ADVERTISEMENT

இந்தச் சூழலில், கா்நாடகத்திலிருந்து புணே நகருக்கு வந்து செல்லும் கா்நாடக அரசுப் பேருந்துகளில் சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு) தொண்டா்களால் ‘ஜெய் மகாராஷ்டிரம்’ என்ற வாசகம் எழுதப்பட்டது. அதை அக்கட்சியைச் சோ்ந்த உள்ளூா் தலைவா் உறுதிப்படுத்தினாா். இதனால் மகாராஷ்டிர - கா்நாடக மாநில எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இது தொடா்பாக, இதுவரை 5 போ் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT