இந்தியா

400 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன்: 2வது நாளாக தொடரும் மீட்புப்பணி!

7th Dec 2022 12:14 PM

ADVERTISEMENT

 

மத்தியப் பிரதேசத்தின் பீட்டல் மாவட்டம் மாண்டவி கிராமத்தில்  400 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து 2வது நாளாக நடைபெற்று வருகின்றது. 

இதுதொடர்பாக கூடுதல் மாவட்ட ஆட்சியர் சைலேந்திர ஜெய்ஸ்வால் கூறுகையில், 

செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவன் தன்மய் சாஹு ஆழ்துளை கிணற்றில் விழுந்தான்.

ADVERTISEMENT

இதுவரை 55 அடிக்கு மேல் ஆழத்தை எட்டியுள்ளோம். கற்கள் இருப்பதால் எதிர்பார்த்ததை விட அதிக நேரம் ஆகிறது. கற்களை உடைக்க பிரேக்கர் இயந்திரம், ஜேசிபி, பொக்லைன் இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. மருத்துவக் குழுவும் சம்பவ இடத்தில் உள்ளது.

படிக்க: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது!

மாநில பேரிடர் மீட்புப் படையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் காவல் துறையினர், சிறுவனைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், மீட்புப் பணிகள் குறித்த தகவல்களை கண்காணித்து வருவதாகவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளூர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் 
தெரிவித்தார். மீட்புக் குழுவினர் சிறுவனை பத்திரமாகக் காப்பாற்ற  முயற்சித்து வருவதாக அவர் கூறினார். 

Tags : borewell MP
ADVERTISEMENT
ADVERTISEMENT