இந்தியா

தில்லி மாநகராட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

7th Dec 2022 08:06 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: தில்லி மாநகராட்சி தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 42 மையங்களில் 20 படைப்பிரிவு துணை ராணுவப் படையினரும், 10,000க்கும் மேற்பட்ட தில்லி காவலா்களும், அதிகாரிகளும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) 250 வாா்டுகளுக்கு கடந்த 4-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 50 சதவிகிதம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர்.

ADVERTISEMENT

மேலும், தில்லியில் உள்ள அரசியல் கட்சிகளின் அலுவலகங்களிலும், முக்கிய சாலைகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT