இந்தியா

கர்நாடகம் உடனான எல்லை பிரச்னை: அமித்ஷாவிடம் முறையிட்ட தேவேந்திர பட்னவீஸ்

DIN

கா்நாடகம்-மகாராஷ்டிரம் இடையேயான பிரச்னை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் முறையிடப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தெரிவித்துள்ளார்.

1957-ஆம் ஆண்டு மொழிவாரியாக கா்நாடக-மகாராஷ்டிர மாநிலங்கள் பிரிக்கப்பட்டதில் இருந்து இரு மாநிலங்களுக்கு இடையே எல்லை கிராமங்கள் தொடா்பான பிரச்னை நிலவி  வருகிறது.

குறிப்பாக கா்நாடகத்தில் உள்ள பெலகாவி நகருக்கும், அந்த மாநிலத்தில் உள்ள 814 மராத்தி மொழி பேசும் மாநிலங்களுக்கும் மகாராஷ்டிரம் உரிமைக் கோரி வரும் நிலையில் கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை, மகாராஷ்டிரத்தில் உள்ள அக்கல்கோட் மற்றும் சோலாப்பூா் மாவட்டத்தில் உள்ள கன்னடம் பேசும் மக்கள் வாழும் பகுதிகள் கா்நாடகத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த கருத்து பூதாகரமானது. 

இதைத் தொடா்ந்து ஓய்ந்திருந்த மகாராஷ்டிர - கா்நாடக எல்லைப் பிரச்னை மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக பெலகாவிக்கு செல்வதாக மகாராஷ்டிர அமைச்சா்கள் தெரிவித்த நிலையில் இதற்கு கர்நாடக அரசு தடை விதித்தது. 

அதையடுத்து இரு மாநிலங்களிலும் எல்லையைக் கடக்கும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தை முன்வைத்து இரு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் இந்த விவகாரத்தில் மகாராஷ்டிர மாநில வாகனங்கள் கர்நாடகத்தில் தாக்கப்பட்டது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடப்பு நிகழ்வுகள் அனைத்தையும் உள்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளேன். எந்தவிதமான காரணமுமின்றி மகாராஷ்டிர வாகனங்கள் தாக்கப்பட்டது குறித்து அவரிடம் தெரிவித்துள்ளேன். இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க கர்நாடக முதல்வரிடம் பேச வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளேன்” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட தோ்தல்: களத்தில் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள், 2 முன்னாள் முதல்வா்கள்!

உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்க காத்திருக்கும் ‘பாகுபலி’ மாநிலம்!

நாட்டை தடுப்பு காவல் முகாமாக பாஜக மாற்றியுள்ளது: மம்தா

ரயில் விபத்துகளை தடுக்க முக்கிய வழித்தடங்களில் ‘கவாச்’ பாதுகாப்பு தொழில்நுட்பம்: தெற்கு ரயில்வே

திமுகவும் பாஜகவும் கபட நாடகம் ஆடுகின்றன: வைகைச்செல்வன் சிறப்பு பேட்டி

SCROLL FOR NEXT